தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
தீபாவளிக்கு முந்தைய நாளான (26-ம் தேதி) சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது விடுமுறை அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
சென்னை,
தீபாவளி பண்டிகை வருகிற 27-ந்தேதி நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. இந்த முறை ஞாயிற்றுக்கிழமை அரசு விடுமுறை நாளில் தீபாவளி பண்டிகை வருவதால் தொடர் விடுமுறைக்கு வாய்ப்பு இல்லாமல் போனது.
26-ந்தேதி சனிக்கிழமை கூட பள்ளிகளுக்கு வேலை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருடத்திற்கு 210 நாட்கள் பள்ளிகள் செயல்பட வேண்டும் என்ற விதியின்படி தீபாவளிக்கு முந்தைய நாளான சனிக்கிழமை (26-ம் தேதி) வேலை நாளாக அறிவிக்கப்பட்டது.
இந்த அறிவிப்பு ஆசிரியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை (27-ம் தேதி) வருவதால் சனிக்கிழமையும் (26- ம்தேதி) விடுமுறை தினமாக அறிவிக்க வேண்டும் என பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நிலையில் தீபாவளிக்கு முன்னதாக சனிக்கிழமை பள்ளிகள் இயங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது (26-ம் தேதி) பள்ளிகளுக்கு விடுமுறையாக அறிவித்து பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
Related Tags :
Next Story