மாநில செய்திகள்

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்தலைமைச்செயலாளர் உத்தரவு + "||" + In TamilNadu 13 IAS officers Transfer

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்தலைமைச்செயலாளர் உத்தரவு

தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் இடமாற்றம்தலைமைச்செயலாளர் உத்தரவு
தமிழகத்தில் 13 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை இடமாற்றம் செய்து தலைமைச்செயலாளர் கே.சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,

தமிழக தலைமைச்செயலாளர் பிறப்பித்துள்ள அரசாணையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளரும், வருவாய் நிர்வாக ஆணையருமான (பொறுப்பு) டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்படுகிறார்.

எரிசக்தி துறை முதன்மைச்செயலாளர் பி.சந்திரமோகன், போக்குவரத்துத்துறை முதன்மை செயலாளராக மாற்றப்படுகிறார். தமிழ்நாடு நகர்ப்புற நிதி மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாட்டுக் கழக (டுபிட்கோ) தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனர் அசோக் டோங்ரே, சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச்செயலாளராக மாற்றப்படுகிறார்.

எரிசக்தித்துறை

சுற்றுலா, கலாசாரம் மற்றும் அறநிலையத்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் அபூர்வ வர்மா, ‘டுபிட்கோ’ தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

தகவல் தொழில்நுட்பத்துறை முதன்மைச் செயலாளர் சந்தோஷ் பாபு, தமிழ்நாடு கைவினை மேம்பாட்டு கழகத்தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குனராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை முதன்மைச்செயலாளர் தீரஜ்குமார், எரிசக்தித்துறை முதன்மைச்செயலாளராக முழு கூடுதல் பொறுப்பு வகிப்பார்.

கலெக்டர் இடமாற்றம்

திருவள்ளூர் சப்-கலெக்டர் டி.ரத்னா, அரியலூர் மாவட்ட கலெக்டராக நியமிக்கப்படுகிறார். அரியலூர் மாவட்ட கலெக்டர் டி.ஜி.வினய், மதுரை மாவட்ட கலெக்டராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அஜய் யாதவ் (இளையவர்) சர்க்கரை கூடுதல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார். டெல்லியில் தூர்தர்ஷன் பொது இயக்குனராக பணியாற்றிய சுப்ரியா சாகு, மத்திய அரசுப்பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட நிலையில் தமிழக ‘இண்ட்கோசர்வ்’ கூட்டமைப்பின் மேலாண்மை இயக்குனராக இடமாற்றம் செய்யப்படுகிறார்.

‘இண்ட்கோசர்வ்’ கூட்டமைப்பு மேலாண்மை இயக்குனர் எஸ்.வினீத், தமிழ்நாடு மின்சார உற்பத்தி மற்றும் வினியோக கழகத்தின் (டான்ஜெட்கோ) இணை மேலாண்மை இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.

மத்திய அரசுப்பணி

மதுரை மாவட்ட கலெக்டராக இருந்த டி.எஸ்.ராஜசேகர் விடுப்பில் செல்கிறார். ‘டான்ஜெட்கோ’ இணை மேலாண்மை இயக்குனர் சுபோத்குமார், மத்திய அரசுப்பணிக்கு செல்கிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.