பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு: ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு


பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கு: ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு
x
தினத்தந்தி 10 Oct 2019 2:43 PM IST (Updated: 10 Oct 2019 2:43 PM IST)
t-max-icont-min-icon

பேனர் விழுந்து சுபஸ்ரீ பலியான வழக்கில் ஜெயகோபால் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை ஐகோர்ட் வரும் 15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

சென்னை,

சென்னையை அடுத்த குரோம்பேட்டை பவானி நகரை சேர்ந்தவர் ரவி. இவருடைய மகள் சுபஸ்ரீ  ‘பேனர்’ விழுந்து பலியான சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக அனுமதி இன்றி பேனர் வைத்ததாக அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால்  மீது மாநகராட்சி உதவி பொறியாளர் அளித்த புகாரின்பேரில், பொது இடத்தில் அனுமதியின்றி பேனர் வைத்து இடையூறு செய்ததாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இதனையடுத்து, பேனர் விவகாரத்தில் கைதான அதிமுக முன்னாள் கவுன்சிலர் ஜெயகோபால் ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். ஜெயகோபாலின் உறவினரான மேகநாதனும் ஜாமீன் கோரி மனு அளித்திருந்தார். இதனைத்தொடர்ந்து இரண்டு பேரின் ஜாமீன் மனுவையும் சென்னை ஐகோர்ட்  இன்று விசாரிக்க உள்ளதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் காலஅவகாசம் வழங்க வேண்டும் என அரசு தரப்பின் கோரிக்கையை ஏற்ற சென்னை ஐகோர்ட்,  ஜெயகோபால், மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான வழக்கினை வரும் அக்.15-ம் தேதிக்கு ஒத்திவைத்தது.

Next Story