ஜனவரிக்கு முன் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ
ஜனவரிக்கு முன் பத்திரிக்கையாளர் நல வாரியம் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
ஜனவரிக்கு முன் பத்திரிக்கையாளர் நல வாரியம் அனைத்து அம்சங்களுடன் அமைக்கப்படும் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
ஸ்ரீவில்லிபுத்தூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜூ, உள்ளாட்சி தேர்தல் விரைவில் நடைபெறும். இடைத்தேர்தலை போன்று அதிமுக கூட்டணி 100 சதவீதம் வெற்றி பெறும். உள்ளாட்சி தேர்தலை எம்எல்ஏக்கள் விரும்பவில்லை என கூறப்படுவது தவறானது. அனைவரும் தேர்தலை எதிர்நோக்கி உள்ளோம்.
ஆன்லைன் முன்பதிவு செயல்பாட்டிற்கு வந்தால், தியேட்டர்களில் சிறப்பு காட்சிகளின் போது கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் எழ வாய்ப்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story