“நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு விருது" அமைச்சர், அரசியல் கட்சித்தலைவர்கள் வாழ்த்து
நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டதையடுத்து அமைச்சர், அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
சென்னை,
கோவா சர்வதேச திரைப்பட விழாவில், நடிகர் ரஜினிகாந்துக்கு சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 50-வது சர்வதேச திரைப்பட விழாவில் வரும் 20 ஆம் தேதி துவங்கி, 28ஆம் தேதி வரை கோவாவில் நடைபெற உள்ளது. இதில் பல்வேறு நாடுகளை சேர்ந்த 200 க்கும் மேற்பட்ட திரைப்படங்கள் இடம்பெற உள்ளன.
மேலும், தமிழில், ஒத்த செருப்பு, ஹவுஸ் ஓனர் உள்ளிட்ட படங்களும், மலையாளத்தில் ஜல்லிக்கட்டு, உயரே, கோலாம்பி உள்ளிட்ட படங்களும், இந்தியில் உரி, கல்லி பாய், சூப்பர் 30 உள்ளிட்ட படங்களும் திரையிடப்பட உள்ளன. கோவா சர்வதேச திரைப்பட விழாவில் பிரபல பாலிவுட் நடிகர் அமிதாப்பச்சனுக்கு தாதா சாஹிப் பால்கே விருது வழங்கப்பட உள்ளது.
மேலும் சிறப்பு நட்சத்திரத்திற்கான விருது, நடிகர் ரஜினிகாந்திற்கு வழங்கப்படும் என மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். இதனிடையே, தனக்கு விருது அறிவிப்பதற்காக மத்திய அரசுக்கு நடிகர் ரஜினிகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்துக்கு அமைச்சர்ஜெயக்குமார், தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
அன்பு நண்பர் ரஜினிக்கு மத்திய அரசு விருது அறிவிக்கப்பட்டதில் மகிழ்ச்சி, இதுபோல மேலும் பல விருதுகளை ரஜினி பெற வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்
அபூர்வ ராகங்கள் தொடங்கி பேட்ட வரை சாதித்த நடிகர் ரஜினிக்கு வாழ்த்து, படையப்பா இன்னும் பல சாதனைகளை படையப்பா என்று தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்திரராஜன் டுவிட்டரில் கூறியுள்ளார்.
நடிகர் ரஜினிக்கு தாமதமாக விருது அறிவிக்கப்பட்டுள்ளது, சிறப்பு விருது பெறும் ரஜினிக்கு வாழ்த்துக்கள் - கருணாஸ் எம்எல்ஏ
மத்திய அரசு விருது அறிவித்துள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழ் மாநில காங். தலைவர் ஜி.கே.வாசன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story