மாநில செய்திகள்

சண்டையிட்டுக்கொண்ட இரு வேறு பள்ளி மாணவர்கள்: நூதன தண்டைனை வழங்கிய போலீசார் - பெற்றோர்கள் பாராட்டு + "||" + Two other schoolchildren fighting

சண்டையிட்டுக்கொண்ட இரு வேறு பள்ளி மாணவர்கள்: நூதன தண்டைனை வழங்கிய போலீசார் - பெற்றோர்கள் பாராட்டு

சண்டையிட்டுக்கொண்ட இரு வேறு பள்ளி மாணவர்கள்: நூதன தண்டைனை வழங்கிய போலீசார் - பெற்றோர்கள் பாராட்டு
திருநெல்வேலியில் சண்டையிட்டுக்கொண்ட இரு வேறு பள்ளி மாணவர்களுக்கு போலீசார் நூதன தண்டனை வழங்கியதை பெற்றோர்கள் வரவேற்றுள்ளனர்.
திருநெல்வேலி,

திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை  வ.உ.சி. மைதானத்தில் இரு வேறு அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு  படிக்கும் மாணவர்கள் சண்டையிட்டுள்ளனர். 

இது குறித்து தகவலறிந்த போலீஸார் அவர்களை பெற்றோரோடு காவல் நிலையத்திற்கு வரவழைத்து,  ஆயிரத்து 330 திருக்குறளையும் எழுத வேண்டும் என்ற தண்டனையை வழங்கினர். 

மாணவர்களும் காவல்நிலையம் முன்பு அமர்ந்த படி ஆயிரத்து 330 திருக்குறளையும் புத்தகத்தை பார்த்து எழுதி கொடுத்துள்ளனர். இந்த சம்பவம் பொதுமக்களிடையே  ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் காவல்துறையின் இந்த தண்டனைக்கு பெற்றோர்கள் வரவேற்பையும்,  பாராட்டையும் தெரிவித்துள்ளனர்.