பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்தது


பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்தது
x
தினத்தந்தி 7 Nov 2019 9:15 AM IST (Updated: 7 Nov 2019 9:15 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைகளில் மழை சற்று குறைந்துள்ளதையடுத்து பவானிசாகர் அணையில் நீர்வரத்து குறைந்துள்ளது.

ஈரோடு,

மேற்கு தொடர்ச்சி மலைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை சற்று குறைந்துள்ளது. இதனையடுத்து ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது. 

நேற்று 3965 அடியாக இருந்த நீர்வரத்து இன்று வினாடிக்கு 2816 அடியாக குறைந்துள்ளது. அணையின் நீர்மட்டம் தொடர்ச்சியாக 104.6 அடியாக உள்ளது.

அணையில் 32.4 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. பவானிசாகர் அணையில் இருந்து பாசனத்திற்காக 2900 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.

Next Story