மாநில செய்திகள்

ரஜினி கருத்துக்கு பதிலடி : வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது -துரைமுருகன் பேட்டி + "||" + It has been several days since Stalin filled the void DuraiMurugan

ரஜினி கருத்துக்கு பதிலடி : வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது -துரைமுருகன் பேட்டி

ரஜினி கருத்துக்கு பதிலடி : வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது -துரைமுருகன் பேட்டி
தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது என்று திமுக பொருளாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
சென்னை,

திமுக பொருளாளர் துரைமுருகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

வெற்றிடம் குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- 

வெற்றிடத்தை காற்று நிரப்பிவிடும் என்பது விஞ்ஞானம், தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் என்ற காற்று நிரப்பிவிட்டது. தமிழகத்தில் ஏற்பட்ட வெற்றிடத்தை ஸ்டாலின் நிரப்பி பலநாட்கள் ஆகிவிட்டது. 

தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார். ரஜினி நேரடியாக அரசியலுக்கு வந்தால் அதை உணர்வார் என துரைமுருகன் தெரிவித்துள்ளார்.