மாநில செய்திகள்

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம்: ரஜினிகாந்த் பேச்சு - அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து + "||" + Rajinikanth speech political leaders openion

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம்: ரஜினிகாந்த் பேச்சு - அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம்: ரஜினிகாந்த் பேச்சு - அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் கூறிய கருத்திற்கு அரசியல் கட்சித்தலைவர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்
சென்னை,

தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர்,  கட்சி தொடங்கும் வரை சினிமாவில் நடிப்பேன் எனவும் கூறினார். மேலும் திருவள்ளுரை போல, எனக்கும் பா.ஜ.க. சாயம் பூச பார்க்கிறார்கள் என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். 

நடிகர் ரஜினிகாந்த் அளித்த பேட்டிக்கு, அரசியல் கட்சியினர் கருத்து தெரிவித்துள்ளனர்.

*தமிழகத்தில் வெற்றிடம் என்பதே இல்லை என, ரஜினிக்கு அமைச்சர் ஜெயகுமார் பதிலடி அளித்துள்ளார். 

*நடிகர் ரஜினிகாந்த், பா.ஜ.க.வில் சேர இருக்கிறார் என ஒருபோதும் கூறவில்லை என, தமிழக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் முரளிதர் ராவ் விளக்கம் அளித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் இதனைத் தெரிவித்தார். 

*தமிழகத்தில் அரசியல் தலைமைக்கான வெற்றிடம் உள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியதை ஏற்க முடியாது என தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

* வெற்றிடம் குறித்து நடிகர் ரஜினி தெரிவித்த கருத்துக்கு, திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி கொடுத்துள்ளார். தொடர்ந்து அரசியல் பயணத்தில் இல்லாததால், ஸ்டாலின் அந்த இடத்தை நிரப்பியதை ரஜினி உணர்ந்திருக்க மாட்டார் என, துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

* ரஜினியை காவிமயமாக்க பாஜக முயற்சிக்கவில்லை  என்று முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

*காவி சாயம் பூச நினைப்பவர்களிடம் திருவள்ளுவரும், நானும் மாட்டிக் கொள்ளமாட்டோம் என நடிகர் ரஜினி கூறியது வரவேற்கத்தக்கது என விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

*ரஜினி காவி அரசியலுக்கு துணை போவதாக பலர் தெரிவித்து வந்த நிலையில், வள்ளுவருக்கு காவி அணிவதை ரஜினி ஏற்றுக்கொள்ளாததோடு, தன் மீதும் காவி பூசுவதாக தெரிவித்த கருத்து வரவேற்கத்தக்கது என்று தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். நமது தந்தி டிவிக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்தார்.