அயோத்தி தீர்ப்பை மனம், மத ரீதியாக ஏற்று ஒற்றுமையாக வாழ வேண்டும்; சரத்குமார் அறிக்கை


அயோத்தி தீர்ப்பை மனம், மத ரீதியாக ஏற்று ஒற்றுமையாக வாழ வேண்டும்; சரத்குமார் அறிக்கை
x
தினத்தந்தி 9 Nov 2019 4:44 AM IST (Updated: 9 Nov 2019 4:44 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ரா.சரத்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

சென்னை, 

அயோத்தி பிரச்சினைக்கு தீர்வு காண முன்னாள் நீதிபதி இப்ராகிம் கலிபுல்லா தலைமையில், வாழும் கலை அமைப்பின் நிறுவனர் ஸ்ரீஸ்ரீரவிசங்கர், மூத்த வக்கீல் ஸ்ரீராம் பஞ்சு ஆகியோர் உறுப்பினர்களாக 3 பேர் கொண்ட மத்தியஸ்தர் குழு இந்த ஆண்டு மார்ச் 9-ந்தேதி அமைக்கப்பட்டது. எனினும் அதிலும் தீர்வு காணப்படவில்லை. இறுதியாக, சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அனைத்து தரப்பு வாதங்களையும் விசாரித்து முடித்த நிலையில் தீர்ப்பினை அறிவிக்க இருக்கிறார்.

தீர்ப்பு எத்தகையதாக இருந்தாலும், நீதித்துறையினை மதித்து இந்தியாவில் உள்ள அனைத்து தரப்பினரும் அத்தீர்ப்பினை மதரீதியாகவும், மனரீதியாகவும் ஏற்றுக்கொண்டு ஒற்றுமையாக வாழ வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எதிர்காலத்தில் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் எந்தவொரு அசம்பாவிதமும் நிகழாமல் இருக்க வேண்டுமானால், கடவுள் வழிபாடு, நீட் தேர்வு, ஜி.எஸ்.டி போன்ற மக்கள் எதிர்காலத்தை தீர்மானிக்கும் முக்கிய முடிவுகள் சட்டமாக் கப்படுவதற்கு முன்னர் மக்கள் உணர்வை மதித்து பொதுஜன வாக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.

Next Story