அயோத்தி தீர்ப்பு : "மதநல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும்" -திமுக தலைவர் மு.கஸ்டாலின்
நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புவதாக அயோத்தி தீர்ப்பு குறித்து மு.க ஸ்டாலின் கூறியுள்ளார்.
சென்னை,
இந்தியா முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய அயோத்தி வழக்கில் சர்ச்சைக்குரிய இடத்தில் ராமர் கோயில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதேபோல், அயோத்தியிலேயே மசூதி கட்டுவதற்காக 5 ஏக்கர் நிலத்தை சன்னி வக்ஃபு வாரியத்திற்கு அளிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள திமுக தலைவர் மு.க ஸ்டாலின், “நீண்ட காலமாக இருந்து வந்த பிரச்சினைக்கு உச்ச நீதிமன்றம் ஒரு தீர்வை கண்டுள்ளதாக கூறியுள்ளார். மேலும், உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வே தீர்ப்பை வழங்கியுள்ள பின்னர், அதை ஏற்றுக்கொண்டு அனைத்து தரப்பினரும் சமமான மத நல்லிணக்கத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டும் என்றும் ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார். நாட்டின் பன்முகத்தன்மைக்கு எந்த சேதாரமும் இல்லாமல் எச்சரிக்கை உணர்வுடன் முன்னெடுத்து செல்வார்கள் என்று நம்புவதாகவும் ஸ்டாலின் கூறியுள்ளார்.
Related Tags :
Next Story