தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை: அதிமுக, திமுக கூறியது குறித்த கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை - ரஜினிகாந்த்
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்த கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை என ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
சென்னை,
நடிகர் ரஜினிகாந்த் நேற்று முன்தினம் போயஸ்கார்டனில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசுகையில், தமிழகத்தில் இன்னும் சரியான, ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இருக்கிறது எனத் தெரிவித்தார்.
இதனிடையே தமிழக அரசியலில் வெற்றிடம் இல்லை என்று விக்கிரவாண்டியில் நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்கூட்டத்தில் எடப்பாடி பழனிசாமி ரஜினிகாந்துக்கு பதிலளிக்கும் விதமாக பேசினார். இதேபோல், தமிழக அரசியல் வெற்றிடத்தை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்கனவே நிரப்பி விட்டதாக நடிகர் ரஜினிகாந்துக்கு திமுக பொருளாளர் துரைமுருகன் பதிலடி தந்தார்.
இந்நிலையில், தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் இல்லை என அதிமுக, திமுக கூறியது குறித்த கேள்விக்கு கருத்து கூற விரும்பவில்லை என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தபோது கூறினார்.
தமிழகத்தில் ஆளுமையான தலைமைக்கு வெற்றிடம் உள்ளதாக ரஜினிகாந்த் ஏற்கனவே தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story