அரசியல் வெற்றிடம் குறித்த ரஜினியின் கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில்
ரஜினி நடிகர் தான், அவர் இன்னும் கட்சி ஆரம்பிக்கவில்லை என்று அரசியல் வெற்றிடம் குறித்த கருத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி பதில் அளித்துள்ளார்.
கோவை,
கோவை விமான நிலையத்தில் முதலமைச்சர் பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தல் குறித்து தேர்தல் ஆணையம் உரிய நேரத்தில் அறிவிக்கும். நாடாளுமன்ற தேர்தலின் போது இருந்த கூட்டணி உள்ளாட்சி தேர்தலிலும் தொடரும். தமிழகத்தில் வெற்றிடம் இல்லை என்பது இடைத்தேர்தல் வெற்றி மூலம் நிரூபணமாகியுள்ளது.
தமிழகத்தில் ஆளுமைமிக்க தலைவர்கள் இல்லை என யார் சொன்னது? ரஜினிகாந்த் என்ன அரசியல் கட்சித்தலைவரா? அவர் ஒரு நடிகர் தான். தமிழக அரசியலில் வெற்றிடம் என தொடர்ந்து அதையே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். வெற்றிடம் குறித்து அரசியல் தலைவர்கள் யாரும் சொல்லவில்லையே.
அதிமுகவில் இணைவது குறித்து அமமுக புகழேந்தி கடிதம் கொடுத்தால் முடிவு எடுக்கப்படும். மத்திய மாநில அரசு இணைந்து மாமல்லபுரத்தை சுற்றுலா தலமாக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story