“திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை”-புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்ற ஏ.பி.சாஹி பேச்சு

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நேற்று பதவி ஏற்றார். விழாவில், திருவள்ளுவர் பிறந்த மண்ணில் பணியாற்றுவது பெருமை என்று அவர் தெரிவித்தார்.
சென்னை,
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக இருந்த வி.கே.தஹில்ரமானி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டதை தொடர்ந்து, அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, சென்னை ஐகோர்ட்டுக்கு புதிய தலைமை நீதிபதியாக, பாட்னா ஐகோர்ட்டு தலைமை நீதிபதி அம்ரேஷ்வர் பிரதாப் சாஹி என்ற ஏ.பி.சாஹியை நியமித்து கடந்த அக்டோபர் 30-ந்தேதி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டார்.
இதையடுத்து புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவி ஏற்பு விழா சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவன், தர்பார் மண்டபத்தில் நேற்று காலை நடந்தது. முதலில் ஜனாதிபதி பிறப்பித்த உத்தரவை, கவர்னரின் கூடுதல் தலைமைச் செயலாளர் ஆர்.ராஜகோபால் வாசித்தார். பின்னர், புதிய தலைமை நீதிபதியை பதவி ஏற்க அவர் அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து, புதிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹிக்கு, கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவி பிரமாணம் செய்து வைத்தார். பின்னர் அவருக்கு பூங்கொத்து கொடுத்து கவர்னர் வாழ்த்து தெரிவித்தார்.
விழாவில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, சபாநாயகர் தனபால் மற்றும் சி.வி.சண்முகம், வேலுமணி உள்ளிட்ட அமைச்சர்களும், சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத்கோத்தாரி மற்றும் ஆர்.சுப்பையா, எம்.சத்தியநாராயணன், என்.கிருபாகரன், எம்.துரைசாமி உள்ளிட்ட ஐகோர்ட்டு நீதிபதிகள், தலைமைச்செயலாளர் சண்முகம், தமிழக டி.ஜி.பி. திரிபாதி, சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் சென்னை ஐகோர்ட்டில் புதிய தலைமை நீதிபதிக்கு வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில், அட்வகேட் ஜெனரல் விஜய்நாராயண், தலைமை நீதிபதியை வரவேற்று பேசினார். இதைத்தொடர்ந்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ் பேசினார். அப்போது அவர், ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைக்க வக்கீல்கள் அனைவரும் ஒத்துழைப்பு வழங்குவார்கள் என்றார்.
இதைத்தொடர்ந்து பேசிய சென்னை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்கத்தின் துணைத்தலைவர் ஆர்.சுதா, ‘சென்னை ஐகோர்ட்டில் 55 நீதிபதிகள் உள்ளனர். இதில், பெண் நீதிபதிகள் வெறும் 9 பேர் தான் உள்ளனர். எனவே, காலியாக உள்ள 20 நீதிபதி பணியிடங்களை நிரப்பும்போது பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’ என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பேசினார்.
அவரைத்தொடர்ந்து மெட்ராஸ் பார் அசோசியேஷன் தலைவர் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன், பெண் வக்கீல்கள் சங்கத்தலைவர் லூயிசால் ரமேஷ், லா அசோசியேஷன் தலைவர் செங்குட்டுவன் ஆகியோரும் பேசினர்.
நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, ‘தமிழகம் கலாசார ரீதியாக மேன்மை அடைந்த மாநிலமாகும். தெய்வப்புலவர் திருவள்ளுவர், முடிவில்லா கணிதத்தை தந்த ராமானுஜம் உள்ளிட்ட அறிஞர்கள் பிறந்த கலாசார பெருமை வாய்ந்த மண்ணில் தலைமை நீதிபதியாக பணியாற்றுவதில் பெருமை கொள்கிறேன். நாட்டின் வளர்ச்சிக்கு, நீதிபதிகள், வக்கீல்களின் பங்கு இன்றியமையாதது.
வரலாற்று சிறப்புமிக்க இந்த ஐகோர்ட்டில் நான் மேற்கொள்ளும் பணிக்கு அனைத்து தரப்பினரிடம் இருந்தும் ஆதரவு கிடைக்கும் என்று நம்புகிறேன்’ என்றார்.

Related Tags :
Next Story