முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் மறைவுக்கு தலைவர்கள் இரங்கல்
முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
சென்னை,
இந்திய முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் (வயது 87), சென்னை அடையாறில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று முன்தினம் இரவு உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருடைய உடல் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்தது. திரளானோர் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்கள்.
இதையடுத்து நேற்று மாலை அவரது உடல் வாகனத்தில் பெசன்ட்நகர் மின் மயானத்துக்கு ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, அங்கு இறுதிச்சடங்குகள் நடைபெற்றன. பின்னர் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலர் இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளனர்.
பிரதமர் மோடி
பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
டி.என்.சேஷன் மிகச்சிறந்த குடிமைப் பணியாளராக திகழ்ந்தார். அவர் இந்தியாவுக்காக மிகுந்த அக்கறையுடனும், நேர்மையுடனும் பணியாற்றியுள்ளார். தேர்தல் சீர்திருத்தங்களை நோக்கி அவர் மேற்கொண்ட முயற்சிகள் நமது ஜனநாயகத்தை வலுவுள்ளதாகவும், அனைவரும் பங்கேற்கத்தக்க வகையிலும் மாற்றியது. அவரது மறைவால் வேதனையடைகிறேன். ஓம் சாந்தி.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
சோனியா காந்தி
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “இந்திய தேர்தல் ஆணையத்தை வலுப்படுத்தியதற்கும், பல தொலைதூர தேர்தல் சீர்திருத்தங்களுக்கு முன்னோடியாக இருந்ததன் மூலமும் சேஷன் எப்போதும் நினைவுகூரப்படுவார்” என்று கூறியுள்ளார்.
ராகுல் காந்தி தனது டுவிட்டர் பக்கத்தில் இரங்கல் செய்தி பதிவிட்டு உள்ளார். அதில், “இன்றுபோல் அல்லாமல் தேர்தல் கமிஷனர்கள் பாகுபாடு இல்லாமல், மரியாதைக்குரியவர்களாக, தைரியமிக்கவர்களாக, பயமற்றவர்களாக செயல்பட்ட காலம் இருந்தது. அவ்வாறு செயல்பட்ட தேர்தல் கமிஷனர்களில் ஒருவர் தான் டி.என்.சேஷன். அவரது மறைவுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமி
முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது:-
முன்னாள் இந்திய தலைமை தேர்தல் கமிஷனரும், ஓய்வு பெற்ற மூத்த இந்திய ஆட்சிப்பணி அதிகாரியுமான டி.என். சேஷன் உடல் நலக்குறைவால் காலமானார் என்ற செய்தியை அறிந்து நான் மிகுந்த வேதனை அடைந்தேன். சேஷன் இந்திய ஆட்சிப்பணி அதிகாரியாக பல்வேறு முக்கிய பொறுப்புகளை வகித்தவர். இவர் தலைமை தேர்தல் ஆணையராக பணியாற்றிய காலகட்டத்தில், தேர்தல் நடைமுறைகளில் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டுவந்தவர் என்ற பெருமைக்குரியவர். தமிழ்நாடு அரசின் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த பதவிகளை வகித்தவர்.
டி.என்.சேஷன் சிறந்த நிர்வாகியாகவும் கடின உழைப்பாளியாகவும், அனைவரிடமும் அன்பாக பழகும் தன்மையுடையவராகவும் திகழ்ந்தார். இந்தியாவின் முன்னாள் தலைமை தேர்தல் கமிஷனர் சேஷனை இழந்து வாடும் அவருடைய குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்வதோடு, அன்னாரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில், இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் கமிஷனர் டி.என்.சேஷன் திடீரென மறைவெய்தினார் என்ற செய்தி கேட்டுப் பெரிதும் வேதனையுற்றேன். அவரது மறைவுக்கு தி.மு.க. சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டில் கண்ணியம் மிக்க தேர்தல் நடைபெற வேண்டும் என்று கடைசி மூச்சு வரை பாடுபட்ட சேஷனின் மறைவால் வாடும் அவருடைய குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், சக ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கும், தேர்தல் ஆணையத்தில் அவரோடு பணியாற்றியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
தலைவர்கள் இரங்கல்
இதேபோல், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன், அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் ஆர்.சரத்குமார், மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், புதிய நீதிக்கட்சி நிறுவனர் ஏ.சி.சண்முகம் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய ஜனநாயக கட்சி தலைவர் ரவி பச்சமுத்து, ஆற்காடு இளவரசர் நவாப் முகமது அப்துல் அலி, தமிழ்நாடு முஸ்லிம் லீக் நிறுவனத் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா உள்ளிட்டோரும் டி.என்.சேஷன் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்பட இந்தியாவில் பிற மாநில முதல்-மந்திரிகள் பலரும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
இரங்கல் கூட்டம்
டி.என்.சேஷன் மறைவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் டெல்லியில் உள்ள தலைமை தேர்தல் கமிஷன் அலுவலகத்தில் இரங்கல் கூட்டம் நடத்தப்பட்டது. தேர்தல் கமிஷனுக்கும், தேசத்திற்கும் என்றென்றும் டி.என்.சேஷன் ஒரு சின்னமாக இருப்பார் என்று தேர்தல் கமிஷன் புகழஞ்சலி செலுத்தி உள்ளது.

Related Tags :
Next Story