3 மாதங்களுக்கு பிறகு தங்கம் விலை ஒரு சவரன் 29 ஆயிரம் ரூபாய்க்கும் கீழே இறங்கியது
கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரலாற்றில் ரூ.29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு அதற்கு கீழே இறங்கியுள்ளது.
சென்னை,
சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.14 குறைந்து ரூ.3,622-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 20 காசு உயர்ந்து ரூ.47.70-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலையில் ஏற்ற இறக்கம் நிலவி வருகிறது. இதன் எதிரொலியாக உள்ளூரிலும் தங்கத்தின் விலையில் மாற்றம் ஏற்பட்டது. கடந்த ஜனவரி மாதம் வரலாற்றிலேயே முதல் முறையாக ஒரு சவரன் தங்கம் விலை 25 ஆயிரம் ரூபாயைத் தாண்டி விற்பனை ஆனது. பின் ஜூன் மாதம் 26 ஆயிரம் ரூபாயை தாண்டி, ஆகஸ்ட் மாதம் 27 ஆயிரம், 28 ஆயிரம், 29 ஆயிரம் என அடுத்தடுத்து உயர்ந்தது. செப்டம்பரில் ரூ.30 ஆயிரத்தைத் தாண்டியும் குறைந்தும் மாற்றம் நிலவி வந்தது. அக்டோபர் மாதத்தில் தங்கத்தின் விலை தொடர்ந்து ரூ.29 ஆயிரத்தை தாண்டி விற்பனை செய்யப்பட்டு வந்தது. நவம்பர் மாதம் தொடங்கியது முதலே தங்கத்தின் விலை ஏறவும் இறங்கவுமாக இருந்தது.
சென்னையில் இன்று (நவம்பர் 12) ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை (22 கேரட்) 14 ரூபாய் குறைந்து 3,622 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல, நேற்று 29,088 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று 28,976 ரூபாயாக விற்பனையாகிறது.
இன்று சவரனுக்கு 112 ரூபாய் குறைந்துள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் 13ம் தேதி வரலாற்றில் ரூ. 29 ஆயிரத்தை தாண்டிய தங்கம் விலை 3 மாதங்களுக்கு பிறகு அதற்கு கீழே இறங்கியுள்ளது. சென்னையில் இன்று வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.47.70 ஆகவும், ஒரு கிலோ வெள்ளியின் விலை ரூ.47,700 ஆகவும் இருக்கிறது.
Related Tags :
Next Story