புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு


புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்களை நியமித்து தமிழக அரசு உத்தரவு
x
தினத்தந்தி 15 Nov 2019 4:11 PM IST (Updated: 15 Nov 2019 4:11 PM IST)
t-max-icont-min-icon

புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை, 

தமிழகத்தில் நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை பிரித்து புதிய மாவட்டங்களை உருவாக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இதன்படி காஞ்சீபுரம் மாவட்டத்தை பிரித்து செங்கல்பட்டை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருந்தார்.

இதுபோல நெல்லையை பிரித்து புதிதாக தென்காசி மாவட்டம், விழுப்புரத்தை பிரித்து கள்ளக்குறிச்சி மாவட்டம் உருவாக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. 

மேலும் வேலூரை 3 ஆக பிரித்து புதிதாக திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் உருவாக்கப்படும் என்றும் அறிவிப்பு வெளியானது. புதிதாக உதயமாகும் மாவட்டங்களில் இடம் பெறும் வருவாய் கோட்டங்கள், தாலுகாக்களை எவை என்பதை  13-ம் தேதி அரசு வெளியிட்டது. 

இந்நிலையில் புதிய மாவட்டங்களுக்கு எஸ்.பி.க்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  

இது தொடர்பாக தமிழக உள்துறை செயலாளர் பிறப்பித்த உத்தரவில்,

 (ஐபிஎஸ் அதிகாரிகள் - நியமிக்கப்பட்ட புதிய இடங்கள்):

* தென்காசி எஸ்.பி.யாக சுகுணா சிங், திருப்பத்தூர் மாவட்ட எஸ்.பி.யாக விஜயகுமார் நியமனம்.

*  கள்ளக்குறிச்சி எஸ்.பி.யாக ஜெயச்சந்திரன், செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி.யாக கண்ணன் நியமனம்.

* ராணிப்பேட்டை எஸ்.பி.யாக  மயில்வாகனன் நியமனம். 

* தில்லை நடராஜன் - பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பி.யாகவும், பாஸ்கரன் - மதுரை துணை கமிஷனராக நியமனம்.

* மகேஷ்- சிஐடி, 'கியூ' பிரிவு எஸ்.பியாகவும், தர்மராஜன் - (சென்னை) திருவல்லிக்கேணி துணை கமிஷனராக நியமனம்

* இளங்கோ- மதுரை 5-வது பட்டாலியன் கமாண்டன்ட்,  மகாபாரதி - சிபிசிஐடி சைபர் செல் பிரிவு எஸ்.பி.யாக நியமனம்.

* காஞ்சிபுரம் மாவட்ட எஸ்.பி.யாக  சாமூண்டீஸ்வரி, வீர ரத்தினம் - திருச்சி நகர குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து துணை கமிஷனராக நியமனம்.

* ராதாகிருஷ்ணன்- சென்னை, பாதுகாப்புப் பிரிவு துணை கமிஷனராகவும், சுதர்சன் - போலீஸ் பயிற்சி பள்ளி முதல்வராக நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Next Story