திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவை எடுத்திருக்கமாட்டார் - மாணவி பாத்திமாவின் தந்தை பேட்டி
திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவை எடுத்திருக்கமாட்டார் என்று ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் கூறியுள்ளார்.
சென்னை,
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க ஐஐடி மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் சென்னை வந்துள்ளார்.
இந்தநிலையில், டிஜிபியை சந்தித்த பின் மாணவி பாத்திமாவின் தந்தை அப்துல் லத்தீப் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
குற்றவாளிகளை கண்டுபிடித்து உரிய தண்டனை பெற்று தருவோம் என டிஜிபி உறுதி அளித்துள்ளார். பாத்திமாவின் மரணம் குறித்து உரிய விளக்கம் அளிக்க வேண்டும்.
என்னுடைய மகள் எந்த சம்பவம் நடந்தாலும், அதை கடிதமாக எழுதி வைப்பார். இந்த சம்பவம் குறித்து அனைத்து விவரங்களையும் தெளிவாக அவர் எழுதி வைத்துள்ளார்.
திறமையும், அறிவும் பெற்ற என் மகள் தற்கொலை முடிவை எடுத்திருக்க மாட்டார். இந்த சம்பவத்தை பார்க்கும் போது இது தற்கொலை இல்லை என தெரிகிறது.
பேராசிரியர் சுதர்சன் பத்மநாபனை பார்த்து என் மகள் அச்சமடைந்திருக்கிறார். எனது மகளின் மரணத்தில் குற்றவாளிகள் யாராக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். எனது மகளுக்கு மிகக் கடுமையான நெருக்கடி கொடுக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story