பிளாஸ்டிக் முட்டை விற்பனையா? பொதுமக்கள் அச்சம்
வத்தலக்குண்டுவில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்பட்டதாக எழுந்த புகாரை அடுத்து அப்பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
திண்டுக்கல்,
கடந்த ஆண்டு நாடு முழுவதும் மக்களை அச்சப்பட செய்த ஒரு விஷயம், பிளாஸ்டிக் அரிசி, பிளாஸ்டிக் முட்டை விற்பனை. குறிப்பாக பிளாஸ்டிக் முட்டைகள் தமிழகத்தில் அதிக அளவில் விற்பனையானதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை மேற்கொண்டனர். இந்தநிலையில் திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டுவில் பிளாஸ்டிக் முட்டை விற்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது.
வத்தலக்குண்டு அருணாசலபுரத்தை சேர்ந்தவர் காசிமாயன். நிலக்கடலை வியாபாரி. இவரது மனைவி நேற்று, அருகில் உள்ள கடையில் முட்டைகள் வாங்கினார். பின்னர் அதில் ஒரு முட்டையை எடுத்து ஆபாயில் போடுவதற்காக உடைத்து தோசை கல்லில் ஊற்றினார். அப்போது அதிலிருந்த வெள்ளைக்கரு பிளாஸ்டிக் போன்று தெரிந்ததாம். இதனால் அதனை எடுத்துவிட்டு, மற்றொரு முட்டையை உடைத்து தோசை கல்லில் ஊற்றினார். அதுவும் முதலில் இருந்தது போல் வெள்ளைக்கரு பிளாஸ்டிக் போல் காணப்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த அவர் தனது கணவரிடம் விவரத்தை கூறினார்.
உடனே காசிமாயன் முட்டைகள் வாங்கிய கடைக்கு சென்று, முட்டை பிளாஸ்டிக் போன்று உள்ளது என்று தோசை கல்லில் ஊற்றிய ஆபாயிலை கடைக்காரரிடம் காண்பித்துள்ளார். அப்போது கடைக்காரர் அந்த முட்டைகளை மொத்த கடையில் வாங்கியதாக தெரிவித்தார். இதையடுத்து கடைக்காரர், பிளாஸ்டிக் முட்டை குறித்து மொத்த கடையில் காட்டி என்னவென்று கேட்டு வருகிறேன் என்று பதில் கூறினார். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கனவே கடந்த ஆண்டு பிளாஸ்டிக் முட்டைகள் தமிழகத்தில் பல இடங்களில் விற்கப்படுவதாக தகவல் பரவிய நிலையில், தற்போது வத்தலக்குண்டுவில் பிளாஸ்டிக் முட்டைகள் விற்கப்பட்டதாக எழுந்த புகார் மக்களிடையே மீண்டும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே இதுதொடர்பாக உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Tags :
Next Story