மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் - அண்ணன் சத்தியநாராயணா பேட்டி
மக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார் என்று ரஜினியின் அண்ணன் சத்தியநாராயணா தெரிவித்துள்ளார்.
தருமபுரி,
ரஜினியின் அண்ணன் சத்திய நாராயணா இன்று தர்மபுரியை அடுத்த அதியமான் கோட்டையில் உள்ள காலபைரவர் கோவிலில் சிறப்பு யாகம் மற்றும் 108 கலச பூஜை நடத்தினார். பின்னர் கால பைரவரின் கோவிலில் ரஜினிகாந்த் - லதா ரஜினிகாந்த் பெயரில் சிறப்பு அர்ச்சனை செய்யப்பட்டது.
சிறப்பு யாகம் நடத்திய பிறகு, ரஜினிகாந்த் அண்ணன் நாராயணா நிருபர்களிடம் கூறியதாவது:-
ஏற்கனவே கடந்த ஆண்டு இந்த கோவிலுக்கு வந்திருந்தேன். கடவுள் அருளால் மீண்டும் இன்று கோவிலுக்கு வந்துள்ளேன். ரஜினியின் குடும்பம் மற்றும் பொது மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டினேன்.
ரஜினி கண்டிப்பாக அரசியலுக்கு வருவார். நல்லதை செய்வார். ரஜினி மீது மக்கள் எதிர்பார்ப்பு வைத்துள்ளனர். ஆட்சிக்கு வந்தால் நன்றாக ஆட்சி செய்வார். மற்ற எதற்கும் ஆசைப் படாதவராக இருக்கிறார். எந்த ஒரு எதிர்பார்ப்பும் அவரிடம் இல்லை.
மக்கள் நலனுக்கு மட்டும் விருப்பப்படுவார். மக்களின் தேவைகளை பூர்த்தி செய்வார். மக்களுக்கு எந்த பிரச்சினையாக இருந்தாலும் நேரடியாக சந்தித்து அதற்கு தீர்வு காண்பார். அவரால் ஒரு நல்ல ஆட்சியை தமிழகத்தில் கொண்டுவர முடியும்.
அரசியல் கட்சி ஆரம்பிப்பது குறித்து அவரே விரைவில் அறிவிப்பார்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story