கரூரில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில் என்ஜின் கோளாறால் நிறுத்தம்
கரூரில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில், என்ஜின் கோளாறால் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டு உள்ளது.
ராசிபுரம்,
கரூரில் இருந்து சேலம் செல்லும் பயணிகள் ரெயில் இன்று காலை புறப்பட்டு சென்றது. வழியில் ரெயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டு உள்ளது. இதனால் நாமக்கல் ராசிபுரம் ரெயில் நிலையத்தில் ரெயில் நிறுத்தப்பட்டது.
ரெயில் என்ஜினை சரி செய்யும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். ரெயில் அரை மணிநேரத்திற்கு மேலாக புறப்படாமல் இருந்தது. இதனால் காலை வேளையில் பணிக்கு செல்வோர், பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவ மாணவிகள் உள்ளிட்ட பயணிகள் அவதியடைந்து உள்ளனர்.
Related Tags :
Next Story