பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி
உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.
சென்னை,
சென்னை தலைமைச்செயலகத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சிகளில் உயர்த்தப்பட்ட சொத்துவரியை மறுபரிசீலனை செய்ய நிதித்துறை முதன்மை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. குழுவின் பரிசீலனை முடியும் வரை பழைய சொத்துவரியே வசூலிக்கப்படும்.
குழுவானது, மறுபரிசீலனை செய்யும் வரை 2018 ஏப்ரல் 1-ம் தேதிக்கு முந்தையை சொத்து வரியை செலுத்தினால் போதுமானது.
கூடுதலாக செலுத்தப்பட்ட சொத்துவரி வரும் ஆண்டுகளில் ஈடு செய்யப்படும். சொத்துவரி குறைக்கப்பட்டதற்கும், உள்ளாட்சித் தேர்தலுக்கும் தொடர்பில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story