அப்பல்லோ மருத்துவமனையில் டாக்டர் ராமதாசை முதலமைச்சர் பழனிசாமி சந்தித்து நலம் விசாரித்தார்
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.
சென்னை
காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்ட பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேற்று காலை ஆயிரம் விளக்கு பகுதியிலுள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவர் என்ற முறையிலும், கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமக கட்சி நிறுவனர் என்ற வகையிலும் அவரை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று சந்தித்து நலம் விசாரித்தார்.
அப்போது அமைச்சர்கள் விஜயபாஸ்கர், எம்.சி சம்பத் உடனிருந்தனர். அதே மருத்துவமனையில் சிகிச்சை பெறும் முன்னாள் எம்பி பாரதி மோகனையும் சந்தித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரித்தார்.
Related Tags :
Next Story