மேயர் பதவிக்கு மறைமுக தேர்தல் கொண்டுவரப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது - திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
மறைமுகத்தேர்தல் முறைக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
மக்கள் நேரடியாக வாக்களித்து மேயரை தேர்ந்தெடுக்கும் முறை ரத்து செய்யப்பட்டு, கவுன்சிலர்கள் வாக்களித்து மேயரை தேர்வு செய்யும் முறை அமல்படுத்தப்படுவதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக அவசரச்சட்டமும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறைமுகத்தேர்தல் மூலம் மேயர், நகராட்சி தலைவர்கள், பேரூராட்சி தலைவர்கள் தேர்வு செய்யப்படும் முறைக்கு கடும் எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன.
இந்த நிலையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியிருப்பதாவது:- மறைமுகத் தேர்தல் முறை மூலம் சர்வாதிகார முறையில் தேர்தல் நடத்த அரசு முயன்றுள்ளது. திமுக ஆட்சியில் அப்போதைய சூழலுக்கு ஏற்ப மறைமுகத் தேர்தல் நடத்தப்பட்டது.
உள்ளாட்சியில் உறுப்பினர்கள் சுதந்திரமாக செயல்பட முடியாததால் மறைமுக தேர்தல் முறை மாற்றப்பட்டது. மறைமுகத்தேர்தல் முறைக்கு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story