பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x
தினத்தந்தி 21 Nov 2019 10:13 AM IST (Updated: 21 Nov 2019 10:13 AM IST)
t-max-icont-min-icon

பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து நேற்றைய அளவை விட இன்று சற்று அதிகரித்துள்ளது.

ஈரோடு,

மேற்கு தொடர்ச்சி மலையின் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதையொட்டி பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.

பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 3,316 அடியில் இருந்து 3,815 அடியாக உயர்ந்துள்ளது. அணையின் நீர்மட்டம் 105 அடியாக தொடர்ந்து நீடித்து வருகிறது.

அணையில் தற்போது 32.8 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது. மேலும் அணையில் இருந்து பவானி ஆற்றிற்கு திறக்கப்படும் நீரின் அளவு 3,300 கனஅடியில் இருந்து 3,800 கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Next Story