காலில் பொருத்தியிருந்த கம்பியை அகற்ற கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை
காலில் பொருத்தியிருந்த கம்பியை அகற்ற கமல்ஹாசனுக்கு இன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது.
சென்னை
மக்கள் நீதி மய்யம் கட்சி துணைத்தலைவர் ஆர்.மகேந்திரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
கடந்த 2016-ம் ஆண்டு எதிர்பாராமல் நடந்த ஒரு விபத்தில் கமல்ஹாசன் வலது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அதை சரிசெய்ய அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, அவரது காலில் டைட்டேனியம் கம்பி ஒன்றும் பொருத்தப்பட்டது.
அரசியல்-சினிமாவில் இருந்த தொடர் வேலைப்பளு காரணமாக அந்த கம்பியை அகற்றுவதற்கான சூழல் அமையவில்லை.
இந்தநிலையில் டாக்டர்கள் ஆலோசனைப்படி கமல்ஹாசனுக்கு இன்று (வெள்ளிக்கிழமை) அந்த கம்பியை அகற்றும் சிகிச்சை மேற்கொள்ளப்பட உள்ளது. சிகிச்சை மற்றும் அதன் தொடர்ச்சியாக சில நாட்கள் ஓய்வுக்கு பின்பு கமல்ஹாசன் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களை சந்திப்பார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story