உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது - அமைச்சர் ஜெயக்குமார்
உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
சென்னை,
மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
உள்ளாட்சி தேர்தலை நியாயமாகவும், நேர்மையாகவும் எதிர்கொள்ள அதிமுக தயாராக இருக்கிறது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் குற்றத்தை எங்கள் மீது சுமத்த மு.க.ஸ்டாலின் முயற்சிக்கிறார். உள்ளாட்சி தேர்தலில் இடஒதுக்கீடு கோரி 2016ல் நீதிமன்றத்தில் வழக்கு போட்டது திமுக தான்.
மக்களுக்கு தொண்டாற்ற வேண்டும் என தேர்தல் அறிவித்தால், திமுகவிற்கு தேர்தல் ஜுரம் வந்துவிட்டது. உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் திமுகவின் இரட்டை வேடம் அம்பலமாகி உள்ளது என கூறினார்.
Related Tags :
Next Story