தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம்


தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு? உண்மையில்லை என தமிழக அரசு விளக்கம்
x
தினத்தந்தி 5 Dec 2019 5:40 PM IST (Updated: 5 Dec 2019 5:40 PM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசு அலுவலர்கள், ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு என வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டதாக வரும் தகவலில் உண்மையில்லை என்று தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

சென்னை,

தமிழக அரசு அலுவலகங்களில் 30 ஆண்டு பணி முடித்தவர்கள் அல்லது 50 வயது நிறைவடைந்தவர்களுக்கு கட்டாய ஓய்வு என  தமிழக அரசு சுற்றறிக்கை அனுப்பியதாக தகவல் வெளியானது.  

இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களுக்கு கட்டாய ஓய்வு வழங்கப்படும் என வெளியான தகவலில் உண்மையில்லை என்றும் வேலைவாய்ப்புத்துறை வெளியிட்டதாக வரும் தகவலில் உண்மையில்லை என்றும் தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது.

Next Story