போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டு: மூத்த நீதிபதி தொடங்கி வைத்தார்
சென்னையில் போக்சோ வழக்குகளை விசாரிக்க சிறப்பு கோர்ட்டை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி நேற்று தொடங்கி வைத்தார்.
சென்னை,
சிறுவர், சிறுமிகளுக்கு எதிராக நடைபெறும் பாலியல் குற்ற (போக்சோ) வழக்குகளை விரைவாக விசாரித்து தீர்ப்பு வழங்க சிறப்பு கோர்ட்டு தொடங்கவேண்டும் என்று பரிந்துரை செய்து சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த பரிந்துரைகளை பரிசீலித்த தமிழக அரசு, சிறப்பு கோர்ட்டு தொடங்க முடிவு செய்து, முதல் கட்டமாக சென்னை, கோவை, கடலூர், காஞ்சீபுரம், கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி உள்பட 16 மாவட்டங்களில் சிறப்பு கோர்ட்டு தொடங்க கடந்த மாதம் 19-ந்தேதி அரசாணை வெளியிட்டது.
இதன்படி, போக்சோ வழக்குகளை விசாரிக்கும் முதல் சிறப்பு கோர்ட்டு, சென்னை ஐகோர்ட்டு வளாகத்தில் நேற்று தொடங்கப்பட்டது. இந்த சிறப்பு கோர்ட்டை, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதி வினீத் கோத்தாரி தொடங்கி வைத்தார்.
பின்னர் பேசிய நீதிபதி வினீத் கோத்தாரி, ‘போக்சோ வழக்குகளை விரைவாக விசாரித்து முடிவுக்கு கொண்டுவர போலீசாரும், வக்கீல்களும் ஒத்துழைப்பு வழங்கவேண்டும். தற்போது சென்னையில் 200-க்கும் மேற்பட்ட போக்சோ வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த வழக்குகளை எவ்வளவு நாட்களுக்குள் விசாரித்து முடிவுக்கு கொண்டுவருவது என்று இலக்கு நிர்ணயிக்க வேண்டும்’ என்று பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு நீதிபதி எம்.கோவிந்தராஜ், மாவட்ட முதன்மை நீதிபதி ஆர்.செல்வகுமார், மாவட்ட நீதிபதிகள் லிங்கேஸ்வரன், புவனேஸ்வரி உள்பட மாவட்ட நீதிபதிகள், சார்பு நீதிபதிகள், லா அசோசியேஷன் என்ற வக்கீல்கள் சங்கத்தின் தலைவர் எல்.செங்குட்டுவன், செயலாளர் கே.ஜெயராமன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story