உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் - மு.க.ஸ்டாலின் பேட்டி
உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு முறையாக தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை,
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவதற்காக நாங்கள் ஒருபோதும் நீதிமன்றத்தை நாடவில்லை. தொகுதி மறுவரையறை, இடஒதுக்கீடு முறையாக இல்லாததால் திமுக நீதிமன்றம் சென்றது.
ஜனநாயகத்தை காக்கும் வகையில் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. தீர்ப்பு திமுகவிற்கு கிடைத்த மாபெரும் வெற்றியாகும். உச்சநீதிமன்ற தீர்ப்பை ஏற்று அரசு முறையாக தேர்தலை நடத்த வேண்டும்.
முறையான உள்ளாட்சி அமைப்பை அமைக்க தமிழக அரசும், மாநில தேர்தல் ஆணையமும் நடவடிக்கை எடுக்க வேண்டும். திமுக தேர்தலை சந்திக்க தயாராக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story