சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.180


சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் பெரிய வெங்காயம் கிலோ ரூ.180
x
தினத்தந்தி 6 Dec 2019 5:50 PM IST (Updated: 6 Dec 2019 5:50 PM IST)
t-max-icont-min-icon

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் நேற்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட பெரிய வெங்காயம் 30 ரூபாய் அதிகரித்து 180 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னை,

வெங்காயத்தின் வரத்து குறைந்துள்ளதால் நாளுக்கு நாள் அதன் விலை அதிகரித்த வண்ணம் உள்ளது. அதேபோல் ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் 170 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முருங்கைக்காயும் விலை அதிகரித்து கிலோ 240 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வழக்கமாக கோயம்பேடு மார்க்கெட்டிற்கு நாள் ஒன்றுக்கு 80 லாரிகளில் வெங்காயம் வந்த நிலையில் தற்போது 30 முதல் 35 லாரிகள் மட்டுமே வருவதால் அதன் விலை அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலை ஜனவரி மாதம் வரை நீடிக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பனாஜியில் வெங்காயத்தின் விலை கிலோ ரூ.165ஐ தாண்டி உள்ளது, இது மிக உயர்ந்தது. நாட்டின் சில பகுதிகளில் விலை கிலோ 180 ரூபாயை தொட்டு உள்ளதாக  தகவல்கள் தெரிவிக்கின்றன.

Next Story