உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில்: இந்தி மொழி பயிற்சி கைவிடப்பட்டது - அமைச்சர் கே.பாண்டியராஜன் பேட்டி
உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் இந்தி மொழி பயிற்சி கைவிடப்பட்டுள்ளதாக அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் சென்னையில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா உலக தமிழாராய்ச்சி நிறுவனத்தில் 2014-ம் ஆண்டு பிற மாநில மொழி மற்றும் அயலக மொழி பயிற்சி பெறும் திட்டத்தை அறிவித்தார். இதன்படி பயிற்சி பெறும் எம்.பில்., பி.எச்.டி. மற்றும் ஒருங்கிணைந்த எம்.ஏ. தமிழ் ஆகிய படிப்புகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இந்திய மொழி மற்றும் அயலக மொழி ஆகியவற்றை விருப்ப பாடமாக அறிவித்தார்.
இதன்மூலம் ஒப்பு இலக்கியம் படிப்பதற்கு மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தது. பிற மாநில மொழி, அயலக மொழிகளை நேரடியாக படிக்க வாய்ப்பு கிடைக்கும் என்பதால் தமிழகத்தை தவிர்த்து பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெறுவதற்கான வாய்ப்பாக அமைந்தது. இதேபோல ஆய்வு கட்டுரைகள் மற்றும் கருத்தரங்குகளில் பங்கேற்று அறிஞர்களோடு உரையாடும் வாய்ப்பும் மாணவர்களுக்கு கிடைத்தது.
தனித்துவமான விஷயம் என்னவென்றால் பிற மொழிகளின் அனுபவமும் நமது மாணவர்களுக்கு கிடைத்தது. விருப்ப பாடத்துக்காக தமிழை தவிர இந்தியாவில் அதிக மக்களால் பேசப்படும் இந்தி, தெலுங்கு, மராட்டி மற்றும் பெங்காலி ஆகிய 4 மொழிகள் தேர்வு செய்யப்பட்டன. 2019-ம் ஆண்டு சட்டசபையில் இதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மாணவர்களே விருப்ப பாடத்தை தேர்வு செய்தார்கள். அதன்படி அயலக மொழியில் பிரெஞ்சு மொழியை அதிக மாணவர்கள் விரும்பினார்கள். இதேபோல இந்திய மொழியில் இந்தி மொழியை தேர்வு செய்தார்கள்.
ஒரு வருடத்துக்கு இந்த பிற மொழி சார்ந்த பயிற்சிகள் 100 மணி நேரம் மட்டுமே நடத்தப்படுகிறது. கட்டாய பாடம் அல்ல. விருப்ப பாடம் மட்டுமே. ஏற்கனவே 3 நாட்கள் இந்த பயிற்சி நடத்தப்பட்டிருக்கிறது. ஆண்டுக்கு 2 ஆயிரத்து 200 மணி நேர பயிற்சி வகுப்பில் வெறும் 100 மணி நேரம் நடத்தப்படும் இந்த பிற மொழி பயிற்சியை, தமிழ் படிக்காமல் இந்தி படிக்கிறார்கள் என்று கூறுவது ஏற்புடையதல்ல. இந்தி மட்டுமே மாணவர்களுக்கு சொல்லி கொடுப்பதாக தி.மு.க. ஒரு பிம்பத்தை உருவாக்கியது. மேலும் அந்த கட்சியின் மாணவர் அணியை தூண்டிவிட்டு ஆர்ப்பாட்டமும் நடத்தியது. தீய நோக்கத்தோடு மாணவர்களிடையே மோதலையும் ஏற்படுத்தியது.
இதையடுத்து மாணவர்கள் இடையே இந்திக்கு மாற்றாக மற்றொரு இந்திய மொழியை விருப்ப பாடமாக தேர்வு செய்வது குறித்து கருத்து கேட்கப்பட்டது. இதன் அடிப்படையில் உயர்மட்டக்குழு இந்தியை கைவிட்டது. அதற்கு பதிலாக தெலுங்கு மொழியை கற்பிக்க பரிந்துரை செய்தது. இதையடுத்து திங்கட்கிழமை (நாளை) முதல் மொத்தம் உள்ள 101 மாணவர்களும் தெலுங்கு மற்றும் பிரெஞ்சு மொழியை விருப்ப பாடமாக படிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story