தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல்: எந்தெந்த பகுதிகளில் எப்போது தேர்தல்? மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் 27 மாவட்டங்களில் 2 கட்டமாக நடக்கவிருக்கும் உள்ளாட்சி தேர்தலின் போது எந்தெந்த பகுதிகளுக்கு எப்போது தேர்தல் நடக்கிறது என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.
சென்னை,
தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக நடைபெறுகிறது. அதன்படி 9 மாவட்டங்கள் தவிர மற்ற 27 மாவட்டங்களுக்கு திட்டமிட்ட தேதியில் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடக்க இருக்கிறது.
இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5 ஆயிரத்து 90 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்கள், 9 ஆயிரத்து 624 கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் 76 ஆயிரத்து 746 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது.
இதில் 27 மற்றும் 30-ந் தேதிகளில் 27 மாவட்டங்களில் எந்தெந்த பகுதிகளில் தேர்தல் நடக்கிறது? என்பதை முறைப்படியாக மாநில தேர்தல் ஆணைய செயலாளர் எல்.சுப்பிரமணியன் நேற்று அரசிதழில் வெளியிட்டார்.
திருவள்ளூர் மாவட்டம்
அதன்படி 27-ந் தேதி தேர்தல் நடக்கும் பஞ்சாயத்து யூனியன்களின் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர், பள்ளிப்பட்டு, பூந்தமல்லி, பூண்டி, ஆர்.கே.பேட்டை, திருவாலங்காடு, திருத்தணி, திருவள்ளூர் யூனியன்களும், 30-ந் தேதி தேர்தல் நடக்கும் பஞ்சாயத்து யூனியன்களின் பட்டியலில் திருவள்ளூர் மாவட்டம் எல்லாபுரம், கும்மிடிப்பூண்டி, மீஞ்சூர், புழல், சோழவரம், வில்லிவாக்கம் யூனியன்களும் இடம் பெற்றுள்ளன.
இந்த பஞ்சாயத்து யூனியன் கள் பகுதியில் உள்ள ஊராட்சி தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கும் இதே தேதியில் தேர்தல் நடைபெறும்.
Related Tags :
Next Story