நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி, முதல்வராக மு.க.ஸ்டாலின் அறிவித்துக்கொள்ள வேண்டியது தான்-அமைச்சர் ஜெயக்குமார்


நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி, முதல்வராக மு.க.ஸ்டாலின் அறிவித்துக்கொள்ள வேண்டியது தான்-அமைச்சர் ஜெயக்குமார்
x
தினத்தந்தி 10 Dec 2019 5:58 AM GMT (Updated: 10 Dec 2019 10:39 AM GMT)

நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி, முதல்வராக மு.க.ஸ்டாலின் அறிவித்துக்கொள்ள வேண்டியது தான் என அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

சென்னை

ராஜாஜியின் 141-வது பிறந்தநாளையொட்டி சென்னை பாரிமுனையில் உள்ள அவரது சிலைக்கு அமைச்சர்கள் மாஃபா பாண்டியராஜன், ஜெயக்குமார், பெஞ்சமின் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

பின்னர் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- 

குடியுரிமை திருத்த மசோதாவால் சிறுபான்மையினருக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என மத்திய அரசு உறுதி அளித்துள்ளது. சிறுபான்மை மக்களுக்கு பாதிப்பில்லை என்பதால் குடியுரிமை சட்ட திருத்த மசோதாவிற்கு ஆதரவு அளித்தோம்.  உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் மாற்றிமாற்றி பேசுகிறார் ஸ்டாலின். 

உள்ளாட்சி தேர்தல் விவகாரத்தில் ஸ்டாலின் ஒரு குழப்பவாதி; முன்னுக்கு பின் முரணாக பேசுகிறார்; எப்படி இருந்த திமுக இப்படி ஆகிவிட்டது. நித்யானந்தா மாதிரி தீவு வாங்கி, முதல்வராக மு.க.ஸ்டாலின் அறிவித்துக்கொள்ள வேண்டியதுதான் என கூறினார்.

Next Story