பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட் இன்று விண்ணில் பாய்கிறது - 23 மணிநேர ‘கவுண்ட்டவுன்’ தொடக்கம்
ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து பி.எஸ்.எல்.வி, சி-48 ராக்கெட் 23 மணி நேர ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு இன்று (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு விண்ணில் பாய்கிறது.
சென்னை,
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஸ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் இருந்து பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட், இன்று (புதன்கிழமை) மாலை 3.25 மணிக்கு 1-வது ஏவுதளத்தில் இருந்து விண்ணில் பாய்கிறது. இந்த ராக்கெட்டில் இந்தியாவுக்கு சொந்தமான பூமி கண்காணிப்பு செயற்கைகோளான ‘ரீசாட்-2பிஆர்1’ என்ற செயற்கைகோள் பொருத்தப்பட்டு உள்ளது.
அத்துடன், இந்த ராக்கெட்டில் வணிக ரீதியிலான வெளிநாடுகளை சேர்ந்த 9 செயற்கைகோள்களும் விண்ணுக்கு அனுப்பப்பட உள்ளது. இந்த செயற்கைகோள்கள் பூமியில் இருந்து 576 கிலோ மீட்டர் உயரத்தில் 37 டிகிரியில் நிலை நிறுத்தப்படுகிறது.
பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் முதல் நிலையில் திட எரிபொருளும், 2-ம் நிலையில் திரவ எரிபொருளும் நிரப்பப்பட்டு உள்ளது. 44.4 மீட்டர் உயரம் கொண்ட பி.எஸ்.எல்.வி. சி-48 ராக்கெட்டில் பொருத்தப்பட்டுள்ள செயற்கைகோளின் எடை 628 கிலோ ஆகும்.
இது இந்தியாவின் 50-வது பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஆகும். இறுதிக்கட்ட பணியான 23 மணி நேர ‘கவுண்ட்டவுன்’ (22 மணிநேரம் 45 நிமிடம்) நேற்று மாலை 4.40 மணிக்கு தொடங்கியது. ராக்கெட் மற்றும் செயற்கைகோளின் செயல்பாடுகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். ‘கவுண்ட்டவுனை’ முடித்து கொண்டு திட்டமிட்டப்படி இன்று மாலை 3.25 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது.
மேற்கண்ட தகவலை இஸ்ரோ விஞ்ஞானிகள் கூறினார்கள்.

Related Tags :
Next Story