பாரதியார் சிலை அடங்கிய ஜதி பல்லக்கை சுமந்து சென்ற அமைச்சர்கள்
பாரதியார் சிலை அடங்கிய பல்லக்கை தோளில் சுமந்து சென்று மகாகவி பாரதியாரின் நிறைவேறாத ஆசையை நிறைவேற்றிய தமிழக அமைச்சர்கள்!
சென்னை
பாரதியார் பிறந்த தினமான இன்று திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் முன்பு அவரது பிறந்தநாள் விழா வானவில் பண்பாட்டு மையமும், தமிழக அரசும் இணைந்து கொண்டாடப்பட்டது.
மகாகவி பாரதியாரின் ஜதி பல்லக்கு ஊர்வலத்தில் அமைச்சர்கள் கடம்பூர் ராஜூ, பாண்டியராஜன், பாஜக மூத்த தலைவர் இல.கணேசன், மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினர் நடராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் வாசலில் தான் யானையின் காலில் மிதிபட்டு பாரதியார் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story