போக்குவரத்து விதிகளை மீறியதாக 202 வழக்குகள் பதிவு
ஏலகிரி மலையில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 202 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
திருப்பத்தூர்
ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் கோடை விடுமுறை மற்றும் வார விடுமுறையான சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகளவில் வருகின்றனர். இதனால் ஏலகிரி மலை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் ஏலகிரி மலை அத்தனாவூர் அருகே வாகன சோதனை சாவடியில், ஏலகிரி மலைக்கு வாகனங்களை சோதனை நடத்தி வருகின்றனர்.
அப்போது மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணியாமல் வருபவர்கள், ஒரே மோட்டார் சைக்கிளில் 3 பேர் செல்வது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனம் ஓட்டுதல் மற்றும் நான்கு சக்கர வாகனத்தில் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டுவது குறித்து வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதித்து வருகின்றனர்.
கடந்த 2 நாட்களில் மட்டும் 202 வழக்குகள் பதிவு செய்து அபராதம் விதித்துள்ளனர்.
Related Tags :
Next Story