பிறந்தது ஆங்கில புத்தாண்டு 2020 : உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள்


பிறந்தது ஆங்கில புத்தாண்டு 2020 : உலகெங்கும் களைகட்டிய கொண்டாட்டங்கள்
x
தினத்தந்தி 1 Jan 2020 12:09 AM IST (Updated: 1 Jan 2020 12:09 AM IST)
t-max-icont-min-icon

உலகம் முழுவதும் பொதுமக்கள் ஆங்கில புத்தாண்டு தினத்தை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை,

2020 ஆம் ஆண்டு பிறந்ததை கொண்டாடும் விதமாக உலகம் முழுவதும்    வேற்றுமைகளைக் கடந்து அனைத்து தரப்பு மக்களும் பல்வேறு கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்த புதிய வருடத்தின் முதல் நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடுவதன் மூலம் இந்த ஆண்டு வெற்றிகரமாகவும், மகிழ்ச்சியாகவும் அமையும் என்ற நம்பிக்கை உலகம் முழுவதும் நிலவி வருகிறது. 

வானவேடிக்கைகள், இசை நிகழ்ச்சிகள், விருந்து கொண்டாட்டங்கள் என பல்வேறு விதங்களில் மக்கள் புத்தாண்டை வரவேற்றனர். நட்சத்திர ஓட்டல்கள், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் புத்தாண்டு கொண்டங்கள் களைகட்டியது.

கிறிஸ்தவ தேவாலயங்களில் புத்தாண்டை முன்னிட்டு சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெற்றது. கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது அனைத்து தரப்பு மக்களும் இந்த சிறப்பு பிரார்தனைகளில் கலந்து கொண்டு புத்தாண்டை வரவேற்றனர்.

உலகின் பல்வேறு நாடுகளில் பிரம்மாண்ட வானவேடிக்கைகள், வண்ணமயமான ஒளி அலங்காரங்கள் செய்யப்பட்டு புத்தாண்டு கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் டெல்லி, பெங்களூரு, மும்பை உள்ளிட்ட நகரங்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தி ஆனந்தமாக கொண்டாடி மகிழ்ந்தனர்.

சென்னை மெரினாவில் புத்தாண்டை கொண்டாட ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்துள்ளனர். ஈரோடு, மதுரை, கோவை உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் கலை நிகழ்ச்சிகள் நடத்தி புத்தாண்டை கொண்டாடினர்.

Next Story