குரூப்-1 தேர்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு: சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர் 2-வது இடம்
குரூப்-1 தேர்வுக்கான தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. இதில் முதல் 8 இடங்களை பெண்கள் பிடித்தனர். 2-வது இடம் பிடித்த மாணவி சைதை துரைசாமியின் மனிதநேய மையத்தில் படித்தவர்.
சென்னை,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) துணை கலெக்டர், துணை போலீஸ் சூப்பிரண்டு உள்ளிட்ட பல்வேறு பதவிகளுக்கான ஒருங்கிணைந்த குடிமைப்பணிகளுக்கான குரூப்-1-ல் அடங்கிய 181 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை கடந்த ஆண்டு ஜனவரி 1-ந்தேதி வெளியிட்டது. இந்த தேர்வுக்கு 2 லட்சத்து 29 ஆயிரத்து 438 பேர் விண்ணப்பித்தனர். இவர்களுக்கு முதனிலை தேர்வு மார்ச் 3-ந்தேதி நடத்தப்பட்டது.
அதற்கான முடிவுகள் ஒரே மாதத்தில் அதாவது ஏப்ரல் 3-ந்தேதி வெளியிடப்பட்டது. முதனிலை எழுத்துத்தேர்வில் 9,442 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இவர்களுக்கு ஜூலை 12 முதல் 14-ந்தேதி வரையிலான நாட்களில் முதன்மை எழுத்து தேர்வு நடத்தப்பட்டது. இந்த தேர்வில் 7,713 பேர் பங்கேற்று தேர்வு எழுதினார்கள். விடைத்தாள்கள் திருத்தப்பட்டு, முதன்மை எழுத்துத்தேர்வு முடிவு கடந்த மாதம் 12-ந்தேதி வெளியிடப்பட்டது.
முதன்மை எழுத்து தேர்வில் விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண், இடஒதுக்கீடு விதி ஆகியவற்றின் அடிப்படையில் 363 பேர் சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்பட்டனர்.
அவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வு கடந்த டிசம்பர் மாதம் 23 முதல் 31-ந்தேதி வரை நடந்தது. நேர்முகத்தேர்வு நடந்த இறுதி நாளான நேற்று, எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத்தேர்வில் பெற்ற மதிப்பெண் விவரம் அடிப்படையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, அர்ச்சனா முதல் இடத்தையும், யுரேகா 2-வது இடத்தையும், தற்போது டி.எஸ்.பி.யாக பணியாற்றி வரும் தனலட்சுமி 3-வது இடத்தையும் பிடித்தனர். இதேபோல மகாலட்சுமி 4-வது இடத்தையும், அஜிதா பேகம் 5-வது இடத்தையும், ஜெயா ராஜா பவுலின் 6-வது இடத்தையும், ரூபினா 7-வது இடத்தையும், லோகநாயகி 8-வது இடத்தையும், ஜஸ்வந்த் கண்ணன் 9-வது இடத்தையும், சரவணன் 10-வது இடத்தையும் பிடித்தனர்.
இதேபோல மாநில தேர்தல் அதிகாரியான பழனிசாமியின் மகன் மித்ரன் 53-வது இடத்தை பிடித்திருக்கிறார். தரவரிசை பட்டியல் அடிப்படையில் முதல் 8 இடங்களை பெண்களே பிடித்திருக்கிறார்கள். பெருநகர சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமி மனிதநேய மையம் நடத்தி வருகிறார். குரூப்-1 தரவரிசை பட்டியலில் மாநில அளவில் 2-வது இடம் பெற்ற யுரேகா, மனிதநேய மையத்தில் படித்தவர். இதேபோல மனிதநேய மையத்தில் படித்தவர்கள் ஏராளமானோர் தரவரிசை பட்டியலில் நல்ல மதிப்பெண்கள் பெற்றிருக்கின்றனர்.
தேர்ச்சி பெற்றவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் குரூப்-1 பதவிகளுக்கான கலந்தாய்வு வருகிற 6-ந்தேதி சென்னையில் உள்ள தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய அலுவலகத்தில் நடைபெற உள்ளது. இதுகுறித்த தகவல் விண்ணப்பதாரர்களுக்கு மின்னஞ்சல் (இ-மெயில்), குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) மூலமாக தெரிவிக்கப்படுவதுடன், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்திலும் வெளியிடப்பட உள்ளது.

Related Tags :
Next Story