சிசிடிவி கேமராவால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன - ஆணையர் விஸ்வநாதன் பேட்டி
சிசிடிவி கேமராவால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன என்று மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னை மாநகர காவல்துறை ஆணையர் விஸ்வநாதன் நிருபர்களிடம் கூறியதாவது:-
பெண்களுக்கு எதிரான செயின் பறிப்பு குற்றங்கள் 2019-ல் 50% குறைந்துள்ளன. சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டதால் சென்னையில் குற்றங்கள் குறைந்துள்ளன.
இந்தியாவில் பெண்கள் பாதுகாப்பில் சென்னை காவல்துறை சிறந்து விளங்குகிறது. காவலன் செயலி குறித்த விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளதால் 10 லட்சம் பேர் அதை பதிவிறக்கம் செய்துள்ளனர்.
வெளிமாநில குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். ஆதாய கொலைகள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருமளவு குறைந்துள்ளன. விபத்துகளில் காயமடைந்தவர்கள், உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story