நெல்லை கண்ணன் கைதா? பரபரப்பு தகவல்


நெல்லை கண்ணன் கைதா? பரபரப்பு தகவல்
x
தினத்தந்தி 1 Jan 2020 9:07 PM IST (Updated: 1 Jan 2020 9:16 PM IST)
t-max-icont-min-icon

பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன.

சென்னை,

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக திருநெல்வேலியில் நடைபெற்ற போராட்டத்தில் நெல்லை கண்ணன் கலந்து கொண்டு பேசினார். அப்போது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து அவதூறாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

நெல்லை கண்ணனின் பேச்சுக்கு பா.ஜ.க சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. மேலும் தமிழக பாரதீய ஜனதா கட்சி நிர்வாகிகள், கவர்னர் பன்வாரிலால் புரோஹித்தை சந்தித்து நெல்லை கண்ணன் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனு அளித்தனர்.

பா.ஜ.க சார்பில் அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நெல்லை கண்ணன் மீது நெல்லை போலீசார்  மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 

இந்த நிலையில், மதுரை தனியார் மருத்துவமனையில் நெல்லை கண்ணன் சிகிச்சை பெற்று வரும் நிலையில் கைது என தகவல் வெளியாகி உள்ளது. பிரதமர் மோடி குறித்து அவதூறாக பேசிய புகாரில் நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்டதாக தகவல் தெரிவிக்கின்றன. 

பெரம்பலூர் அருகே தனியார் விடுதியில் தங்கியிருந்த நெல்லை கண்ணனை போலீசார் கைது செய்தாக கூறப்படுகிறது.

நெல்லை கண்ணன் கைதானதாக தகவல் வெளியான நிலையில் போலீசார் தரப்பில் இருந்து உறுதிப்படுத்தபட வில்லை. மருத்துவர்களின் ஆலோசனைப்படி நெல்லை கண்ணனிடம் விசாரிப்பது பற்றி முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

Next Story