மாநில செய்திகள்

ஜனாதிபதி, பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து + "||" + President, to the Prime Minister Edapady Palanisamy Happy New Year

ஜனாதிபதி, பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து

ஜனாதிபதி, பிரதமருக்கு எடப்பாடி பழனிசாமி புத்தாண்டு வாழ்த்து
புத்தாண்டையொட்டி ஜனாதிபதி, பிரதமருக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி புத்தாண்டையொட்டி ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதிக்கு, எடப்பாடி பழனிசாமி அனுப்பிய வாழ்த்து செய்தியில், “தமிழக மக்கள் மற்றும் தமிழக அரசு சார்பில் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றுவதற்கு வலிமையை உங்களுக்கு இறைவன் கொடுக்கட்டும்” என்று கூறியுள்ளார்.

பிரதமருக்கு வாழ்த்து

வெங்கையா நாயுடுவுக்கு அனுப்பிய வாழ்த்தில், “உங்களுக்கும், உங்களுடைய மனைவிக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும் என்னுடைய புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்” என்று கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமி, நரேந்திர மோடிக்கு மலர் கொத்துடன் புத்தாண்டு வாழ்த்துசெய்தி அனுப்பினார். அதில், “தமிழக மக்கள் சார்பிலும், தமிழக அரசு சார்பிலும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். உங்களுடைய திறமையான தலைமையால் வளர்ச்சி மற்றும் செழிப்பு என்ற பாதையில் நாடு தொடர்ந்து பீடு நடை போடும் என்று எதிர்நோக்கி காத்திருக்கிறோம்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

இதேபோல பன்வாரிலால் புரோகித்துக்கு அனுப்பிய வாழ்த்துசெய்தியில், “உங்களுக்கும், உங்களுடைய குடும்பத்தினருக்கும் புத்தாண்டு வாழ்த்து தெரிவிப்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன். நாட்டுக்காக தொடர்ந்து சேவையாற்றுவதற்கு, இறைவன் உங்களுக்கு வலிமை கொடுக்கட்டும்” என்று எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பன்வாரிலால் புரோகித் நன்றி தெரிவித்ததோடு, பதிலுக்கு அவரும் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஜனாதிபதியுடன் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சந்திப்பு
2020-2021 ஆம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ள நிலையில், ஜனாதிபதியை நிதி அமைச்சர் சந்தித்தார்.
2. ஜனாதிபதி பொங்கல் வாழ்த்து
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நாட்டு மக்கள் அனைவருக்கும் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார்.