ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் 4 மணி முன்னிலை நிலவரம்
ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் குறித்து 4 மணி முன்னிலை நிலவரம் வெளியாகி உள்ளது.
சென்னை
பதவிகள் | அ.தி.மு.க கூட்டணி | தி.மு.க. கூட்டணி | மற்றவர்கள் |
மாவட்ட கவுன்சிலர் | 137 | 132 | 1 |
ஒன்றிய | 643 | 546 | 36 |
தகவல்:தந்தி டிவி
* நாகை; ராதாநல்லூர் ஊராட்சி மன்ற தலைவராக பாஜக வேட்பாளர் அகோரம் வெற்றி
* திருச்சி வையம்பட்டி ஒன்றிய வெற்றி விவரம் அறிவிப்பதில் தாமதமானதால் அதிகாரிகளின் செயலை கண்டித்து திமுகவினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
* ஆரணி மேற்கு ஒன்றிய வாக்கு எண்ணிக்கையில் தாமதம் அதிகாரிகளுடன் திமுகவினர் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
* கரூர் கிருஷ்ணராயபுரத்தில் வெற்றி சான்றிதழ் தராததை கண்டித்து அதிகாரிகளிடம் திமுகவினர் வாக்குவாதம் செய்தனர்.
* பொள்ளாச்சி வடக்கு ஒன்றிய கவுன்சிலர் 1-வது வார்டு அதிமுக வேட்பாளர் சம்பூரணம் வெற்றி.
* திருவாரூர்: கோட்டூர் ஒன்றியம் 5-வது வார்டில் பாஜக வேட்பாளர் அரவிந்தன் வெற்றி.
* நாகை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியம் 4-வது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் திமுக வேட்பாளர் ஜெயபிரகாஷ் வெற்றி
* தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் ரேவதி வெற்றி
* திருச்சி: லால்குடி ஒன்றியம் 1-வது வார்டில் திமுக வேட்பாளர் முத்துலட்சுமி வெற்றி
* விருதுநகர்: சாத்தார் ஊராட்சி ஒன்றியம் 1வது வார்டில் மதிமுக வேட்பாளர் செல்லத்தாய் வெற்றி
* தூத்துக்குடி: கோவில்பட்டி ஒன்றியம் 4-வது வார்டு தேமுதிக வேட்பாளர் நிர்மலா வெற்றி.
* திருவள்ளூர்: மீஞ்சூர் ஒன்றிய வாக்கு எண்ணும் மையத்தில் மதிய உணவு வழங்கப்படவில்லை எனக்கூறி ஊழியர்கள் வெளிநடப்பு
* எடப்பாடி, பக்கநாடு ஊராட்சி மன்ற தலைவராக தங்கமணியும், ஆடையூர் ஊராட்சி மன்ற தலைவராக கலைவாணியும் வெற்றி பெற்றுள்ளனர்.
* கரூர்: மொடக்கூர் கிழக்கு ஊராட்சி மன்ற தலைவராக கார்த்திகேயன் வெற்றி
* கரூர்: கொடையூர் ஊராட்சி மன்ற தலைவராக ராதிகா வெற்றி
* கரூர்: நாகம்பள்ளி ஊராட்சி மன்ற தலைவராக தமிழ்மணி வெற்றி
Related Tags :
Next Story