9:00 மணி நிலவரம்: 80 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவரானார்!


9:00 மணி நிலவரம்: 80 வயது மூதாட்டி ஊராட்சி மன்ற தலைவரானார்!
x
தினத்தந்தி 2 Jan 2020 9:51 PM IST (Updated: 2 Jan 2020 9:56 PM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கலக்கும் மூதாட்டிகள். ஊரக உள்ளாட்சித் தேர்தலில் திருப்பூர் மேட்டுப்பாளையம் ஊராட்சி மன்ற தலைவராக 80 வயது மூதாட்டி விசாலாட்சி தேர்வானார்.

பதவிகள்

அ.தி.மு.ககூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
(515)

164

166

1

ஒன்றிய
கவுன்சிலர்
(5067)

935

1135

106

ஆதாரம்: தந்தி டிவி

சென்னை,

* அதிமுக முன்னாள் அமைச்சர் துரை ராமசாமியின் மனைவி விசாலாட்சி (80 வயது) திருப்பூர் மேட்டுபாளையம் ஊராட்சி தலைவராக தேர்வானார்.

* தூத்துக்குடி: திருச்செந்தூர் பிச்சிவிளை ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ராஜேஸ்வரி, வெறும் 10 ஓட்டுகள் மட்டுமே பெற்று வெற்றி பெற்றார். அங்கு பதிவான 13 ஓட்டுகளில் 10 ஓட்டுகள் பெற்று, ஊராட்சி மன்ற தலைவராக தேர்வாகி உள்ளார்.

* கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் 11வது வார்டு ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சுனில் வெற்றி பெற்றார்.

* திருத்துறைப்பூண்டி அருகே பூசலாங்குடி ஊராட்சி மன்றத் தலைவி தேர்தலில் போட்டியிட்டு 22 வயது பிபிஏ பட்டதாரி இளம்பெண் வெற்றி பெற்றுள்ளார்.


Next Story