குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் 7-ந்தேதி பா.ஜனதா பேரணி


குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் 7-ந்தேதி பா.ஜனதா பேரணி
x
தினத்தந்தி 3 Jan 2020 2:20 AM IST (Updated: 3 Jan 2020 2:20 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக சென்னையில் வருகிற 7-ந்தேதி பா.ஜனதா சார்பில் பேரணி நடைபெற உள்ளதாக மாநில செயலாளர் கே.டி.ராகவன் தெரிவித்தார்.

தாம்பரம்,

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முக்கிய நகரங்களில் கூட்டங்கள் மற்றும் பேரணிகள் நடத்த பா.ஜனதா முடிவு செய்து உள்ளது.

இது தொடர்பாக சென்னை தாம்பரம் அடுத்த சேலையூரில் தமிழக பா.ஜனதா செயலாளர் கே.டி.ராகவன் நிருபர்களிடம் கூறியதாவது:-

குடியுரிமை திருத்த சட்டம் குறித்து மக்களிடம் தவறான பிரசாரங்கள் செய்யப்பட்டு வருகிறது. இஸ்லாமிய மக்கள் உள்பட எந்த இந்தியருக்கும் இந்த சட்டத்துக்கும் தொடர்பு இல்லை. ஆப்கானிஸ்தான், வங்காளதேசம் ஆகிய நாடுகளில் இருந்து துன்புறுத்தப்பட்டு வெளியேற்றப்பட்ட மக்களுக்கே இச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

7-ந்தேதி பேரணி

இது தொடர்பாக பா.ஜனதாவினர் வீடு, வீடாக சென்று மக்களை சந்தித்து குடியுரிமை திருத்த சட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்தவும், பொய்யான பிரசாரத்தை முறியடிக்கவும் முடிவு செய்துள்ளோம். தெருமுனை கூட்டங்கள், பேரணி, சமூக ஊடகங்கள் மூலமாக இது தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளோம்.

குடியுரிமை திருத்த சட்டத்துக்கு ஆதரவாக பா.ஜனதா சார்பில் சென்னையில் வருகிற 7-ந் தேதி பிரமாண்ட பேரணி நடைபெற உள்ளது. நெல்லை கண்ணனின் பேச்சு மிகவும் கண்டிக்கத்தக்கது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது அவருடன் பா.ஜனதா தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதாசுப்பிரமணியம் இருந்தார்.

Next Story