திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திருநங்கை வெற்றி
திருச்செங்கோடு ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் திருநங்கை ரியா அபார வெற்றி பெற்றார்.
திருச்செங்கோடு,
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு ஊராட்சி ஒன்றியத்தில் 2-வது வார்டு கவுன்சிலருக்கான தேர்தலில் 4,693 வாக்குகள் பதிவானது. இதில் 164 வாக்குகள் நிராகரிக்கப்பட்டன.
நேற்று நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில், இங்கு போட்டியிட்ட திருநங்கை ரியா (வயது 35) என்பவர் ஒன்றிய கவுன்சிலர் தேர்தலில் 2,701 வாக்குகள் பெற்று அபார வெற்றி பெற்றார்.
வெற்றி பெற்ற திருநங்கை ரியாவுக்கு தேர்தல் அலுவலர் பாலசுப்பிரமணியன் சான்றிதழ் வழங்கினார். திருநங்கை ரியாவுக்கு பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
பேட்டி
இதுகுறித்து திருநங்கை ரியா கூறியதாவது:-
எனது சொந்த ஊர் திருச்செங்கோடு அருகே உள்ள கருவேப்பம்பட்டி ஆகும். நான் சென்னையில் பணிபுரிந்து வருகிறேன். தி.மு.க. சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளேன். நான் மக்கள் பிரச்சினைகளை தீர்க்க பாடுபடுவேன். இந்த வெற்றியை முன்னாள் தி.மு.க. தலைவர் கருணாநிதிக்கும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கும் சமர்ப்பிக்கிறேன். முழு நேர அரசியல்வாதியாக இருந்து மக்கள் பணியாற்றுவேன்.
இவ்வாறு திருநங்கை ரியா கூறினார்.
Related Tags :
Next Story