கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் வெற்றிபெற்ற கல்லூரி மாணவி
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தேர்தலில் கல்லூரி மாணவி ஒருவர் வெற்றி பெற்றார்.
சூளகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள சூளகிரி ஒன்றியத்திற்கு உட்பட்டது கே.என்.தொட்டி ஊராட்சி. இந்த ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிட்ட வேட்பாளர் சந்தியா ராணி (வயது 21) வெற்றி பெற்றுள்ளார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளரை விட 108 வாக்குகள் அதிகமாக பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்த தேர்தலில் சத்தியாராணி 1,056 வாக்குகளும், அவரை எதிர்த்து போட்டியிட்ட வேட்பாளர் 948 வாக்குகளும் பெற்றுள்ளார்.
கல்லூரி மாணவி
ஊராட்சி மன்ற தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட சந்தியா ராணி, கல்லூரி மாணவி ஆவார். இவர் கர்நாடக மாநிலம் மாலூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பி.பி.ஏ. 3-ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது தந்தை ஜெயசாரதி முன்னாள் கே.என்.தொட்டி ஊராட்சி மன்ற தலைவர் ஆவார்.
தேர்தலில் வெற்றி பெற்றதற்கான சான்றிதழை சந்தியா ராணியிடம், சூளகிரி வட்டார வளர்ச்சி அலுவலரும், தேர்தல் அலுவலருமான விமல் ரவிக்குமார் வழங்கினார்.
Related Tags :
Next Story