ஊரக உள்ளாட்சி தேர்தல்: 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு


ஊரக உள்ளாட்சி தேர்தல்: 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு
x
தினத்தந்தி 3 Jan 2020 10:27 AM IST (Updated: 3 Jan 2020 10:27 AM IST)
t-max-icont-min-icon

ஊரக உள்ளாட்சி தேர்தல்: 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவு பெற்றது. எஞ்சிய 6 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையவில்லை.

சென்னை,

பதவிகள்

அ.தி.மு.க கூட்டணி

தி.மு.க. கூட்டணி

மற்றவர்கள்

மாவட்ட கவுன்சிலர்
(515)

213

234

2

ஒன்றிய
கவுன்சிலர்
(5067)

1946

2131

471


ஆதாரம்: தந்தி டிவி

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது.

இதில் 27 மாவட்ட ஊராட்சிகளுக்கு உட்பட்ட 515 மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் பதவியிடங்களும், 314 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட 5,090 ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவியிடங்களும், 9,624 ஊராட்சி தலைவர் பதவி இடங்களும், 76 ஆயிரத்து 746 ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவியிடங்களும் அடங்கும்.

முதல் கட்ட தேர்தலில் 76.19 சதவீத வாக்குகளும், இரண்டாவது கட்ட தேர்தலில் 77.73 சதவீத வாக்குகளும் பதிவாயின. ஓட்டு எண்ணிக்கை 315 மையங்களில் நேற்று தொடங்கியது.

 பல்வேறு மாவட்டங்களில் விடிய விடிய நடைபெற்று வருகிறது. கரூர், நாமக்கல், சிவகங்கை, சேலம், திருச்சி, நீலகிரி, மதுரை, தூத்துக்குடி, தேனி, திண்டுக்கல்  உள்பட 21 மாவட்டங்களில் வாக்கு எண்ணிக்கை நிறைவுபெற்று உள்ளது. 6 மாவட்டங்களில் முழுமையாக நிறைவுபெறவில்லை.

நாமக்கல் மாவட்டம் - மொத்த இடங்கள் 17 அதிமுக கூட்டணி - 13 திமுக கூட்டணி - 4

* திருச்சி மாவட்டம் - மொத்த இடங்கள் 24 அதிமுக  கூட்டணி -5 திமுக கூட்டணி -19

* கடலூர் மாவட்டம் - மொத்த இடங்கள் 29 அதிமுக  கூட்டணி - 11 திமுக கூட்டணி - 13

* சிவகங்கை மாவட்டம் - மொத்த இடங்கள் 16 அதிமுக  கூட்டணி - 9 திமுக கூட்டணி - 7

* சேலம் மாவட்டம் - மொத்த இடங்கள் 29 அதிமுக கூட்டணி - 15 திமுக கூட்டணி - 1

* கரூர் : மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மொத்தம் 12 உறுப்பினர்களில் 9 இடங்களை வென்ற அதிமுக மாவட்ட ஊராட்சியை கைப்பற்றுகிறது..

* கோவை மாவட்ட கவுன்சிலர் தேர்தலில் ஆறுகுட்டி எம்எல்ஏ மகள் அபிநயா வெற்றி

* அரியலூர் : மாவட்ட ஊராட்சி வார்டுகளில் மொத்தம் 12 உறுப்பினர்களில் 11 இடங்களை வென்ற அதிமுக கூட்டணி மாவட்ட ஊராட்சியை கைப்பற்றுகிறது.

Next Story