தொண்டையில் சிக்கிய 'பஜ்ஜி' உயிரிழந்த பெண்
பெண் ஒருவர் பஜ்ஜி சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை
சென்னையில் சூளைமேடு காமராஜர் நகரைச் சேர்ந்தவர் கங்காதரன். தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவரது மனைவி பத்மாவதி, கடையில் உருளைக்கிழங்கு பஜ்ஜி வாங்கி வந்து தமது தாயுடன் சாப்பிட்டுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக பத்மாவதியின் தொண்டையில் பஜ்ஜி சிக்கி, மூச்சு திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக அவரை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து சென்றனர்.
பத்மாவதியை சோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்துள்ளனர். இது குறித்து சூளைமேடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story