வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர்: சர்ச்சையில் சிக்கிய அ.தி.மு.க. பெண் ஒன்றிய கவுன்சிலர்
வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் பெயர் இருப்பதாக அ.தி.மு.க. பெண் ஒன்றிய கவுன்சிலர் மீது சர்ச்சை எழுந்துள்ளது. எனவே தலைவர் தேர்தலில் அவர் வாக்களிக்க தடை வாங்க தி.மு.க. முடிவு செய்துள்ளது.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிந்து பதிவான வாக்குகள் அனைத்தும் கடந்த 2-ந் தேதி எண்ணப்பட்டன. அதன்படி வெற்றி பெற்ற மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், கிராம ஊராட்சி தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் இன்று (திங்கட்கிழமை) பதவி ஏற்கிறார்கள்.
மாவட்ட ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய குழு தலைவர்களை தேர்வு செய்யும் மறைமுக வாக்கெடுப்பு 11-ந் தேதி நடைபெற உள்ளது. திருப்பூர் மாவட்டத்தில் திருப்பூர், காங்கேயம், ஊத்துக்குளி, குண்டடம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் சுயேச்சை கவுன்சிலர்களே, ஒன்றிய தலைவர்களை தீர்மானிக்கும் நிலையில் உள்ளனர். இதனால் சுயேச்சை கவுன்சிலர்களுக்கு மவுசு அதிகரித்து விட்டது. திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் மொத்தம் உள்ள 8 வார்டுகளில் அ.தி.மு.க.-4, தி.மு.க.-2, காங்கிரஸ்-1, சுயேச்சை-1 ஆகிய பலத்துடன் உள்ளனர்.
இந்த நிலையில் பல்வேறு பகுதிகளில் ஒன்றிய கவுன் சிலர்களாக வெற்றி பெற்றவர்களுக்கு இரண்டு இடங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் இருப்பதாக புகார் எழுந்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, திருப்பூர் ஊராட்சி ஒன்றியத்தில் 8-வது வார்டில் அ.தி.மு.க. சார்பில் நின்று ஒன்றிய கவுன்சிலராக வெற்றி பெற்றுள்ள கல்பனா என்பவருக்கு ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட முதலிபாளையம் ஊராட்சியில் உள்ள வாக்காளர் பட்டியலிலும், திருப்பூர் மாநகராட்சி 29-வது வார்டு பாகம் எண் 6-ல் வரிசை எண் 814-லும் பெயர் இருப்பதாக தி.மு.க. தரப்பில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
எனவே, ஐகோர்ட்டு வக்கீல்களோடு ஆலோசனை செய்து ஒன்றிய தலைவரை தேர்ந்தெடுக்கும் மறைமுக தேர்தலில் அவர் வாக்களிக்க தடை வாங்கும் நடவடிக்கையில் தி.மு.க.வினர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Related Tags :
Next Story